COLLEGE SONG
கல்லூரிப் பாடல்
வாழியவே போப் கல்லூரி
வளர்ந்திடவே எம் கல்லூரி
வளர்ந்திடவே எம் கல்லூரி
ஞான நன்னேறி விளங்கிடும் நன்மனை
மோனமாம் இறைநலம் நிலை நின்றிடும்
சாயர் புரம்போப் கல்லூரி இன்னிசை
வான மாம் எல்லை வளர்ந்திட வாழ்த்தும்
மோனமாம் இறைநலம் நிலை நின்றிடும்
சாயர் புரம்போப் கல்லூரி இன்னிசை
வான மாம் எல்லை வளர்ந்திட வாழ்த்தும்
ஆயிரத்துத்தொளாயிரத்து
அறுபத்திரண்டாம் ஆண்டிலே
பொறுப்புடன் கல்லூரி நிறுவனர்
சிறப்புடன் வளர்ந்து நிகழ்ந்திடும் இன்றே
அறுபத்திரண்டாம் ஆண்டிலே
பொறுப்புடன் கல்லூரி நிறுவனர்
சிறப்புடன் வளர்ந்து நிகழ்ந்திடும் இன்றே
அறிஞர் போப்பின் அரும்புகழ் நிலைத்திட
அமைத்தனர் கல்விக் கடலாம் இதனை
அனுதினம் அறிவைப் பரப்பிடல் நினைந்தே
மனநிறைவுடனே வாழ்த்துவம் மகிழ்ந்தே
அமைத்தனர் கல்விக் கடலாம் இதனை
அனுதினம் அறிவைப் பரப்பிடல் நினைந்தே
மனநிறைவுடனே வாழ்த்துவம் மகிழ்ந்தே
இதந்தரும் முதல்வனாயிரும் அல்லது
முதல்வனோடிரு என்னும் மொழியினை
மூல மந்திரம் என்றே உரைத்தார்
ஆல மரத்தினை அமைத்தார் சின்னமாய்
முதல்வனோடிரு என்னும் மொழியினை
மூல மந்திரம் என்றே உரைத்தார்
ஆல மரத்தினை அமைத்தார் சின்னமாய்
தமிழ்மா ணாக்கன் என்று தம்மை
அமிழ்தாம் தமிழுக்குரிமை செய்த
பெருமணச் செம்மல் பெயர்கொண்டு திகழும்
திருமிகு கல்விக் கூடம் வாழ்க
அமிழ்தாம் தமிழுக்குரிமை செய்த
பெருமணச் செம்மல் பெயர்கொண்டு திகழும்
திருமிகு கல்விக் கூடம் வாழ்க
Menu