Available Courses

AVAILABLE PROGRAMME

Application Fee for Aided Courses

       Aided UG - Rs.50
       Aided PG - Rs.60
       Application Online Processing Fee Rs.50/-(All Courses)

Application Fee for Unaided Courses

       Unaided UG - Rs.100
       Unaided PG - Rs.100
       Application Online Processing Fee Rs.50/-(All Courses)

 

Eligibility

1.Eligibility  for admission to the above programmes will be as per the norms prescribed by the Government/Manonmaniam Sundaranar University from time to time.
2.Admission to Aided/ Self-Financed Programmes will purely be based on merit.

மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2021- 2022

Ø கல்வியாண்டு (2021 – 2022) பட்டப்படிப்பிற்குரிய மாணவர் சேர்க்கை இணையதளம் வழியாக மட்டுமே நடைபெறும்.

Ø அனைத்து மாணவர்களும் விண்ணப்பிப்பதற்குரிய நடைமுறைகளை விண்ணப்பிப்பதற்கு முன் ஒருமுறை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பின் பூர்த்தி செய்யும்படி கேட்டு;க்கொள்ளப்படுகிறார்கள்.

Ø தவறுதலான தகவல்களோடும், போதுமான தகவல்கள் இல்லாமல் பதிவு செய்த விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

Ø கல்லூரியின் admission.popescollege.edu.in/application என்ற மாணவர் சேர்க்கை வலைத்தள முகவரிக்கு சென்று ‘Apply online’ என்ற இணைவினை சொடுக்கி (Link) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டு;ம்.

Ø மாணவர்களுக்கு வழங்கப்பட்ட படிவ எண் மற்றும் பதிவு எண் மாற்றத்தக்கதல்ல.

Ø மாணவர்கள் பதிவு செய்த பின், பிற விவரங்களை பதிவிட தங்கள் அலைபேசி எண் (Mobile Number) பயனர் பெயராகவும் (User Name) தாங்கள் உருவாக்கிய கடவுச்சொல்லை (Password) பயன்படுத்தி உள்நுழைய (Login) வேண்டும்.

Ø விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் ஒவ்வொரு பாடபிரிவுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும்ஒரு மாணவர் தகுதி பெற்ற எத்தனைப் பாடங்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். மதிப்பெண்களின் தகுதி மற்றும் அரசு விதிமுறைகளின் அடிப்படையில் மட்டுமே மாணவர்; சேர்க்கை நடைபெறும்.

Ø இணையதளச் சேர்க்கைப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்பியது கல்லூரியில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாகப் பொருளாகாதுமாணவர்கள் படிவம் அனுப்பியதை உறுதி செய்து கொள்ளவேண்டும்

Ø அரசு உதவி பெறும் (Aided) இளநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப படிவக் கட்டணம் ரூ.50/- மட்டும்.

Ø சுயநிதி (Self Finance) இளநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப படிவக் கட்டணம் ரூ.100/- மட்டும்.

Ø அரசு உதவி பெறும் (Aided) முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப படிவக் கட்டணம் ரூ.60/- மட்டும்.

Ø சுயநிதி (Self Finance) முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்ப படிவக் கட்டணம் ரூ.100/- மட்டும்.

Ø இணையதள செயலாக்கக் கட்டணம் ரூ.50/- மட்டும்.

Ø பட்டியல் இனத்தவர்கள் / பட்டியல் பழங்குடிகள் இனத்தவர்கள் (SC/ST/SCA) மாணவர்களுக்கு விண்ணப்பப்படிவம் அரசு உதவி பெறும் (Aided) ஒரு பாட பிரிவுக்கு இலவசமாக வழங்கப்படும்சுயநிதிப்பாடபிரிவு விண்ணப்பங்களுக்கு இந்த இலவச அறிவிப்பு பொருந்தாது.

Ø விண்ணப்பப் படிவக் கட்டணம் எக்காரணத்தைக் கொண்டும் திருப்பித்தரப்பட மாட்டாதுபதிவிற்கான கட்டணமாக மட்டுமே அது எடுத்துக் கொள்ள வேண்டும்.

Ø மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பத்தை மாணவர்கள் வலைத்தளம் (Online) மூலமாகவே பதிவு (Registration) செய்யவேண்டும். நேரிலோ அல்லது தபால் மூலமோ கல்லூரிக்கு அனுப்புதல் கூடாது.

Ø தேர்வு முடிவுகள் வெளியான பத்து தினங்களுக்குள் மாணவர்கள் பதிவு (Submit) செய்திடல் வேண்டும்.

Ø பின்னர் செய்யப்படும் விண்ணப்பம், தாமத விண்ணப்பமாகவே (Late Registration) கருதப்படும்.

Ø தேர்வு முடிவுகள் வெளியான பத்து தினங்களுக்குள் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவேற்றம் (Upload) செய்திடல் வேண்டும்.

Ø மாணவர் சேர்க்கை தொடர்பான தெளிவுகளுக்கு கல்லூரியின் அலுவல் தொலைபேசி எண்களான (04630-273233, 9488177579, 9362941886) ஆகிய எண்ணிற்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டு தகவலறியலாம்.

Ø கல்லூரியில் விடுதி வசதி இருபாலருக்கும் தனித்தனியே உள்ளது.

Ø மாணவர் சேர்க்கை உறுதி மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் நேர்காணல் தேதி பற்றிய விபரங்கள் தங்களுக்கு அலைப்பேசி (Mobile Phone) மூலம் தெரிவிக்கப்படும்.

Ø நேர்காணலுக்கு தேவையான அசல் சான்றிதழ் மற்றும் இணையதளத்தில் சமாப்பித்த சேர்க்கைப் படிவத்தின் நகல் (Application Form) ஆகியவற்றோடு கல்லூரி முதல்வர் அவர்களை பெற்றோரோடு நேரில் வந்து சந்திக்க வேண்டும்.

Ø குறிப்பிட்ட நாளில் நேர்காணலுக்கு கல்லூரிக்கு நேரில் வர தவறும் பட்சத்தில் தங்கள் இடம் அடுத்த நபருக்கு வழங்கப்படும்.

Ø கல்லூரியின் மாணவர் சேர்க்கையின் போது கொண்டு வரவேண்டிய அசல் சான்றிதழ்கள்.

இளநிலை மாணவர்கள்

+1 மற்றும் +2 மதிப்பெண் சான்றிதழ் (அசல் மற்றும் நகல் 3)

+2 மாற்றுச் சான்றிதழ் (அசல்)

சாதிச்சான்றிதழ் (அசல் மற்றும் நகல் 1)

ஆதார் அட்டை (நகல் 1)

பாஸ்போர்ட அளவு நிழற்படம் 1 (Recent Passport Size Photo)

வாக்காளர் அடையாள அட்டை நகல் 1 (Voter Identity Card)

முதுநிலை மாணவர்கள்

Ø UG மதிப்பெண் சான்றிதழ் (அசல் மற்றும் நகல் 2)

Ø UG மாற்றுச் சான்றிதழ் (அசல்)

Ø சாதிச்சான்றிதழ் (அசல் மற்றும் நகல் 1)

Ø ஆதார் அட்டை (நகல் 1)

Ø பாஸ்போர்ட நிழற்படம் 1 (Recent Passport Size Photo)

Ø வாக்காளர் அடையாள அட்டை நகல் 1 (Voter Identity Card)