Department of Tamil
தமிழ்த்துறை
தமிழின் விளைநிலமாம் சாயர்புரத்தில் தமிழ்த்தொண்டர் அறிஞர் அருட்திரு. ஜி. யு. போப்பும், ‘கிறிஸ்தவக் கம்பர்’ என்றழைக்கப்பட்ட ஹெ. ஆ. கிரு~;ணப் பிள்ளையும் தமிழாசிரியர்களாகப் பணியாற்றியுள்ளனர். இச்சாயர்புரத்தில் 1880-ஆம் ஆண்டு முதல் 1883-ஆம் ஆண்டு வரை சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஒரு கல்லூரி இருந்தமையால், போப் நினைவு பள்ளியின் முன்னாள் மாணவர்களின் பெரும் முயற்சியால், தூத்துக்குடி – நாசரேத் இணைந்த அப்போதைய திருநெல்வேலி திருமண்டலத்தின்(சி.எஸ.ஐ) சார்பாக, 1962-ஆம் ஆண்டு தமிழக முன்னாள் முதல்வர் கு.காமராசர் அவர்களின் அனுமதியோடு, ஜி.யு.போப்பின் ஞாபகார்த்தமாக மீண்டும் போப் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. அதுமுதல் தமிழ்த்துறையும் இயங்கி வருகிறது.
முதலில் தமிழ்த்துறை பொதுத்தமிழ் (புநநெசயட வுயஅடை) என்ற மொழிப்பாடம் பயிற்றுவிக்கும் துறையாகச் செயல்பட்டு வந்தது.;2013-ஆம் ஆண்டில் இளங்கலைத் தமிழும் (டீ.யு)இ 2017-ஆம் ஆண்டில் முதுகலைத் தமிழும்(ஆ.யு), சுயநிதிப் பாடப்பிரிவில் தொடங்கப் பெற்றன. இதன் அடுத்த மைல் கல்லாக 2017- ஆம் ஆண்டு போப் கல்லூரி தன்னாட்சி(யுரவழழெஅழரள) என்னும் தனிப்பெரும் தகுதியினைப் பெற்றுள்ளது. இதனால் தமிழ்த்துறை தன்னாட்சிப் பாடத்திட்டத்திற்கேற்ப பாடத்திட்டம் வகுத்தும், பாடப் புத்தகங்கள் வெளியிட்டும் செயல்பட்டு வருகிறது.
தற்பொழுது தமிழ்த்துறையில் பொதுதமிழுக்கென அரசு உதவி பெறும் நிரந்தர மூன்று பேராசிரியர்களும், இளங்கலை, முதுகலை மற்றும் பொதுத்தமிழுக்கென பதிகோரு சுயநிதிப் பேராசிரியர்களும்; பணியாற்றி வருகின்றனர். தமிழ்த்துறையுடன் இணைந்து எப்சிபா லாமேக் இல்லத்தில் ‘ஜி. யு. போப் தமிழ் ஆய்வு மையம்’ ஒன்றும் இயங்கி வருகிறது. தமிழ்த்துறையில் மொத்தம் ஆறு பேர் முனைவர்(Ph.னு) பட்டம் பெற்றுள்ளனர். இவர்களில் மூன்று பேர் முனைவர் (Ph.னு) பட்ட ஆய்வு நெறியாளர்களாக உள்ளனர். தமிழ்த்துறையின் நூலகத்தில் சுமார் 3000 புத்தகங்கள் உள்ளன. வருங்காலத்தில் இத்தமிழ்;துறை முனைவர் (Ph.னு) பட்ட தமிழ் உயராய்வு மையம் என்ற உன்னத நிலையை அடைய முன்னேறிக் கொண்டிருக்கிறது.